Connect with us

மார்க் ஆண்டனி படத்தில் நாங்க ஏமாந்தது போல யாரும் தயவு செய்து ஏமாறாதீர்கள்..விஷாலின் வைரல் வீடியோ!

Cinema News

மார்க் ஆண்டனி படத்தில் நாங்க ஏமாந்தது போல யாரும் தயவு செய்து ஏமாறாதீர்கள்..விஷாலின் வைரல் வீடியோ!

இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால்,எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்படம் வசூலிலும் சாதனையை படைத்தது அதனால் அனைவருமே மகிழ்ச்சியில் உள்ளனர்,சொல்லப்போனால் இது 70 கோடி கிட்ட வசூல் செய்தது…

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி பதிப்பிற்காக மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாக நடிகர் விஷால் புகார் தெரிவித்துள்ளார்.இதை இத்தனை நாட்கள் ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது…

இது தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பார்க்கவே மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.3 லட்சம் கேட்டதாகவும் சான்றிதழ் வழங்க ரூ.3.5 லட்சம் கேட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ.6.5லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்து ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட்டேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.இப்படி ஒரு மோசமான நிலை தான் நடந்துள்ளது என சொல்லியுளளார்.

மேலும் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை மராட்டிய முதல்-மந்திரி மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்…பலரும் ஏன் இவ்வள்வு நாள் இதை சொல்லாமல் மறைத்தீர்கள் என சொல்லி விமர்சித்தும் வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று நாளில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top