Connect with us

பிக் பாஸ் புகழ் அக்ஷரா ரெட்டியிடம் நடத்தப்பட்ட திடீர் விசாரணை..! வெளியான பரபரப்பு தகவல்..

Bigboss Tamil 5

பிக் பாஸ் புகழ் அக்ஷரா ரெட்டியிடம் நடத்தப்பட்ட திடீர் விசாரணை..! வெளியான பரபரப்பு தகவல்..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் அக்ஷரா ரெட்டி. அந்த நிகழ்ச்சியில் இவர் 84 நாட்கள் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது அதே பிக் பாஸ் சீசன் 5 பிரபலம் வருண்க்கு ஜோடியாக திரைப்படத்தில் நடித்து வருகிறார் அக்ஷரா ரெட்டி.

இந்நிலையில் கோழிக்கோட்டில் நேற்று தங்க கடத்தல் வழக்கு சமந்தமாக அக்ஷரா ரெட்டியிடம் அமலாக்கத்துறையினரால் விசாரணை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு கொச்சின் விமான நிலையத்தில் இரண்டு புர்கா அணிந்த பெண்கள் 20 கிலோ தங்கம் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஃபைஸ் என்பவர் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

இந்த வழக்கில் அக்சரா ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

முன்னதாக ஃபைஸிடம் நடைபெற்ற விசாரணையில் அவருக்கும் திரைத்துறையினருக்கும் சம்பந்தம் உள்ளது தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 பிரபலம் அக்ஷரா ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணை ! வெளியான பரபரப்பு தகவல்..

அக்சரா ரெட்டியின் உண்மையான பெயர் ஸ்ராவ்யா சுதாகர் என்றும் தங்கக் கடத்தல் வழக்கில் மாட்டிக்கொண்டதால் தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டதாகவும், அவர் பிக்பாஸில் கலந்துகொண்டபோது தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Tamil 5

To Top