Connect with us

“Jailer படத்தில் நடிப்பதற்காக Captain Miller படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்ற நடிகர்!”

Cinema News

“Jailer படத்தில் நடிப்பதற்காக Captain Miller படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்ற நடிகர்!”

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரூ.630 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

இந்நிலையில் இதில் வில்லனாக நடித்துள்ள விநாயகனுக்கு ரூ.35 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி கேட்டபோது, “ஜெயிலர் படத்துக்கு நான் வாங்கிய சம்பளம் அதுவல்ல. அதைவிட 3 மடங்கு எனக்கு கொடுத்தார்கள்.

நான் என்ன சம்பளம் கேட்டேனோ அதைக் கொடுத்தார்கள். படப்பிடிப்பில் என்னைச் சிறப்பாக நடத்தினார்கள். இந்தப் படத்தின் வாய்ப்பிற்காக நான் ‘கேப்டன் மில்லர்’ வாய்ப்பை ஏற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார் விநாயகன்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லால் ஸலாம் படத்தில் ரஜினி அவர்கள் நடிப்பதற்கு இத்தனை கோடி சம்பளமா??

More in Cinema News

To Top