Connect with us

இலங்கை பிரச்சினையை கையிலெடுத்த விக்ரமன்.. சரியான பதிலடி கொடுத்த ஜனனி..!!

Big boss 6

இலங்கை பிரச்சினையை கையிலெடுத்த விக்ரமன்.. சரியான பதிலடி கொடுத்த ஜனனி..!!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் இலங்கை பிரச்சினையை கையிலெடுத்து பேசிய விக்ரமனுக்கு ஜனனி கடும் பதிலடி கொடுத்தார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற டாஸ்கில் இன்று தமிழ் குறித்த வழக்கு ஒன்று வந்துள்ளது. அதாவது இலங்கையில் இருந்து பிக்பாஸில் பங்கேற்றுள்ள ஜனனி பேசும் தமிழ் குறித்து குற்றம் சாட்டி விக்ரமன் வழக்கு தொடுத்துள்ளார்.

இதில் ஜனனி சார்பில் அசீம் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடும் நிலையில், விக்ரமன் சார்பில் குயின்ஸி ஆஜராகி வாதாடுகிறார். அப்போது வழக்கம் போல அசீம் பேச, இதனால் குயின்ஸிக்கு கோபமே வந்துவிட்டது. என்ன நம்ம குயின்ஸிக்கு கோபப்பட கூடத் தெரியுமா என ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தமிழ் வழக்கு விவகாரம் தொடர்பாக ஜனனி மற்றும் விக்ரமன் நேரடியாக பேசிக் கொண்ட ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ப்ரோமோ வீடியோ, விக்ரமன் சீரியஸாக எடுக்காதீங்க இது கேம் என ஜனனி கூறுவதுடன் தொடங்குகிறது. ஜனனியின் பேச்சை கேட்ட விக்ரமனோ, அதை இப்படி மாத்தி இலங்கை அது இதுனு மாத்த பார்த்தீங்க என கூறினார்.

பதிலுக்கு ஜனனி, இல்லை இல்லை இல்லை நாங்க இலங்கையை எல்லாம் கொண்டு வர மாட்டோம் என்று கூற, அதற்கு விக்ரமன் உறுதியாக சொல்றேன், நான் அதை மீன் பண்ணி சொல்லவில்லை என கூறினார். உடனே ஜனனி, அது எனக்கு தெரியாது, செந்தமிழ்னு நீங்க சொல்லவே இல்லையே என்றார்.

உடனே விக்ரமன் பிளேட்டை திருப்பி போடுவது போல், டாஸ்க்கின்போது எல்லோருக்குமே அது சிரமமாக இருந்துச்சு, அதானல் சிரமமா இருந்ததானு தான் நான் கேட்டேன் என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்துவிட்டார்.

இதை பார்த்த ரசிகர்கள், இதெல்லாம் ஒரு பிரச்சினைனு விக்ரமன் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்ததே தப்பு, அதிலும் சம்பந்தமே இல்லாமல் இலங்கையை எதற்காக இழுக்கிறார்? எதையாவது பேச வேண்டும், சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்பது தான் விக்ரமன் என்னமா? விக்ரமன் ரொம்ப பயங்கரமானவர் என நிவாஷினி சொன்னது சரின்னு இப்போ தான் புரியுது என தாறுமாறாய் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே விக்ரமன் ஆதவாளர்கள் பிரஷர் குக்கர் அசீம் எப்படியோ ஜனனியை தூண்டிவிட்டு விக்ரமனை சிக்க வைத்து நினைத்ததை சாதித்துகொண்டார் என அசீமை கழுவி ஊற்றி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Big boss 6

Advertisement
 

Trending

 
Advertisement
To Top