Connect with us

ஒரு கதை சொல்லட்டுமா சார்…ஹ்ரித்திக் ரோஷனின் மிரட்டலான விக்ரம் வேதா டீசர்…வீடியோ

Cinema News

ஒரு கதை சொல்லட்டுமா சார்…ஹ்ரித்திக் ரோஷனின் மிரட்டலான விக்ரம் வேதா டீசர்…வீடியோ

தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஹிந்தியிலிம் புஷ்கர்& காயத்திரி படத்தை இயக்கியுள்ளனர். இதில், மாதவனுக்கு பதிலாக சயிஃப் அலிகானும் விஜய்சேதுபதிக்கு பதில் ஹிருத்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது.

தம்பதிகளான புஷ்கர் – காயத்ரி ஆர்யா நடிப்பில் வெளியான ‘ஓரம் போ’ படம் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமாயினர். கடந்த 2017 ஆம் ஆண்டும் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கினர். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படம் இவர்களது கேரியரில் மட்டுமல்லாது, விஜய் சேதுபதி கேரியரிலும் மிக முக்கியமான படமாக அமைந்தது.

Image

சினிமா உலகில் அதிக கவனம் பெற்ற இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அந்தத்தகவலை கடந்த மார்ச் மாதம் புஷ்கர் மற்றும் காயத்ரி உறுதிப்படுத்தினர். இந்தப்படத்தை தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த YNOT Studios -வுடன் இணைந்து Plan C Studios மற்றும் Reliance Entertainment, T-Series Films நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. இந்தப்படத்தில் ஹிருத்திக்ரோஷன் விஜய்சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்திலும், சைஃப் அலி கான் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Image

இவர்களுடன் ராதிகா ஆப்தே, ரோகித் சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்தி ரீமேக்கிற்கு பின்னணி இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு விஷால் சேகர் இசையமைத்துள்ளார். 175 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "நடிகர் மாதவன் எழுதி நடிக்கும் படத்தை இயக்கும் தனுஷ் பட இயக்குனர்! படத்தின் பெயர் இதுதானா?!"

More in Cinema News

To Top