Connect with us

நன்றி, தேங்க்ஸ், நன்னி, தன்யவாத்..!! பல மொழிகளில் நன்றி சொன்ன விக்ரம்..!!

Ponniyin_Selvan_Vikram

Cinema News

நன்றி, தேங்க்ஸ், நன்னி, தன்யவாத்..!! பல மொழிகளில் நன்றி சொன்ன விக்ரம்..!!

பொன்னியின் செல்வன் படத்திற்கும், ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்திற்கும் கொடுத்த வரவேற்புக்கு, பல மொழிகளில் நடிகர் விக்ரம் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி மணிரத்தினம் இயக்கத்தில் உருவான படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களின் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா என மிஇகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள நடிகர் விக்ரம் தனது கதாப்பாத்திரத்திற்கு அளித்துள்ள பிரமாண்ட வரவேற்பு குறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,நன்றி, தேங்க்ஸ், நன்னி, தன்யவாத் என பழமொழிகளிலும் நன்றி தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அனைவரும் கொண்டாடுவதை பார்க்கும்போது, இதை விட மகிழ்ச்சி ஒரு நடிகனுக்கு கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top