Connect with us

பொன்னியின் செல்வன் படத்தையும் விட்டு வைக்கல …ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

Cinema News

பொன்னியின் செல்வன் படத்தையும் விட்டு வைக்கல …ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் (செப் 30) பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இதன் பட்ஜெட் 500 கோடி எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டர்களில் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்கி எழுதிய கற்பனை காவியமான பொன்னியின் செல்வன் படத்தை திரைப்படமாக எடுத்து அதை பான் இந்தியா மூவியாக ரிலீஸ் செய்துள்ளனர். ஏற்கெனவே வெளியான பான் இந்தியா படங்களான RRR, கே.ஜி.எஃப் , விக்ரம் படங்கள் இந்தியா சினிமாவை வேற லெவலுக்கு எடுத்து சென்றன.

இந்த லிஸ்டில் பொன்னியின் செல்வனும் சேர வேண்டும் என ஒட்டுமொத்த சினிமா விரும்பிகளும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் ஓப்பனிங்குக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பேசி இருந்தார். அதில், பொன்னியின் செல்வன் படம் அமர் கல்கியின் கதை என்பது அனைவருக்கும் தெரியும் இந்த படத்தை பலரும் எடுக்க முயற்சி செய்து அது முடியாமல் போய், தற்போது மணிரத்தினம் அதை நிறைவேற்றி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்காதவர்களுக்கு படம் பிடிக்கும், புத்தகத்தை படித்தவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். படத்திற்காக கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த படம் இந்த அளவுக்கு வெற்றி பெறக்காரணம் படத்தின் கதாபாத்திரத் தேர்வு மிகவும் வலுவானதாக இருக்கிறது.

தொடர்ந்து படத்தை புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்த ப்ளு சட்டை மாறன், இந்த விமர்சனம் நல்லா இருந்துதா.. இது எல்லாருக்குமான விமர்சனம் இல்லை சில முட்டு பாய்ஸ்க்கான விமர்னம் என்று கூறிவிட்டு பின்னர் வழக்கம் போல தனது பாணியில் பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்தார். பொன்னியின் செல்வன் படத்தை விமர்சிக்காக காரணம் என்னென்னா அடுத்து வர உள்ள இரண்டாம் பாகத்தையாவது நல்லா எடுக்கணும்.. இல்ல இரண்டாவது பாகத்தை எடுக்காமலாவது இருப்பார்கள் என்றார்.

ப்ளு சட்ட மாறனின் விமர்சனத்தை கேட்டு கடுப்பான நெட்டிசன்ஸ், இவனை புடிச்சி ஜெயிலில் போடவேண்டும் என்றும், பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தீர்களா என்றும் ரசிகர்கள் மாறி மாறி அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரிங்கு சிங் தடாலடி ஆட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி..!!

More in Cinema News

To Top