Connect with us

விக்ரம் part 2 இருக்குறதே பெரிய சஸ்பென்ஸ்…இதுல படத்துல வேற ஒரு சஸ்பென்ஸ் வைத்த லோகேஷ்..?

Cinema News

விக்ரம் part 2 இருக்குறதே பெரிய சஸ்பென்ஸ்…இதுல படத்துல வேற ஒரு சஸ்பென்ஸ் வைத்த லோகேஷ்..?

லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ இயக்கும் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, மற்றும் ஃபஹத் பாசில் ஆகிய மூன்று சிறந்த நடிகர்களை ஒன்றிணைந்து தற்பொழுது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.மேலும் லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் இறுதியில் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய சஸ்பென்சை வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இந்த படத்தின் இறுதியில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற ஒரு அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திருக்கான ஷூட்டிங் அண்மையில் தொடங்கப்பட்டு உள்ள நிலையில்,நடிகர் கமலுடன் விஜய்சேதுபதி ,பகத் பாசில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பஹத் வில்லன் கதாபாத்திரத்திலும் ,நடிகர் கமல் கண் தெரியாத கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக உறுதிப்படாத தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்பதையும் அந்த படத்தின் இறுதியில் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ’விக்ரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் லோகேஷ் கனகராஜ் உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in Cinema News

To Top