Connect with us

விஜய் தேவரகொண்டாவின் ”லிகர்” படத்தில் இப்படியொரு வில்லனா..!திரும்பி பார்க்க வைத்த அறிவிப்பு

Cinema News

விஜய் தேவரகொண்டாவின் ”லிகர்” படத்தில் இப்படியொரு வில்லனா..!திரும்பி பார்க்க வைத்த அறிவிப்பு

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.அத்தகைய ரசிகர் பட்டாளத்திலே தற்பொழுது தமிழ் ,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டாவின் முதல் பாலிவுட் படமான லிகர், இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பான வேகத்தில் நடக்கிறது. இயக்குனர் பூரி ஜகந்நாத் இந்த படத்தினை இயக்கி வருகிறார்.அனன்யா பாண்டே மற்றும் ரம்யா கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘லிகர்’ படத்தை கரண் ஜோஹர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.

குத்துச்சண்டை அடிப்படையிலான கதை என்று கூறப்படும் லிகர் செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியிடப்படும் என கூறப்பட்டது .ஆனாலும் படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லைகர் திரைப்படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடிக்கிறார் என்ற அதிரடியான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அரங்கில் குத்துச்சண்டை என்றாலே நினைவுக்கு வரும் இரு பெயர்களில் ஒன்று முகமது அலி மற்றொன்று மைக் டைசன்.

இந்திய திரை வரலாற்றில் முதல்முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிகர் மைக் டைசன் நடிக்க இருப்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் விஜய் தேவர்கொண்டா- மைக்டைசன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. விஜய் தேவர்கொண்டா-மைக் டைசன் மோதும் அதிரடி காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in Cinema News

To Top