Connect with us

என்னது.. தீ தளபதி பாடலை பாடியது சிம்புவா..? படக்குழு வெளியிட்ட தீ அறிவிப்பு..!!

Cinema News

என்னது.. தீ தளபதி பாடலை பாடியது சிம்புவா..? படக்குழு வெளியிட்ட தீ அறிவிப்பு..!!

வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், தீ தளபதி என்ற அந்த பாடலை சிம்பு பாடியுள்ள தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக எக்ஸ்பிரெஸ் குயின் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும், இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் மூலம் முதன்முறையாக விஜய் நடிக்கும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்‌ன் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, இரண்டாவது பாடலாக “தீ தளபதி” என்ற பாடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அப்டேட் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று படக்குழு வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், “தீ தளபதி” பாடலை பாடியதற்காக நடிகர் சிம்புவுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த பாடலை சிம்பு தான் பாடியுள்ளார் என தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

படக்குழுவின் இந்த அப்டேட்டால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top