Connect with us

விஜய்யின் வாரிசு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் வாங்க விடாமல் பண்ண விஜய்..?இதுக்கு பின்னாடி இப்படி ஒரு அர்த்தமா ..?

Cinema News

விஜய்யின் வாரிசு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் வாங்க விடாமல் பண்ண விஜய்..?இதுக்கு பின்னாடி இப்படி ஒரு அர்த்தமா ..?

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் தமிழக உரிமையை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். அந்தப் படத்தின் வியாபாரம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி கூட்டணியில் தில் ராஜு தயாரித்துள்ள படம் வாரிசு. இந்தப் படத்திற்கு இன்னும் ஒரு வார படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாரிசு படத்தின் வியாபாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே வியாபாரப் பணிகளை தில்ராஜு தொடங்கினார். அதில் முதல் கட்டமாக ஆடியோ வெளியீட்டு உரிமையை 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார். அதன் பின் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனத்திற்கு 47 கோடி ரூபாய்க்கு கொடுத்தார். இதைத்தொடர்ந்து டிஜிட்டல் உரிமம் வெளிநாட்டு உரிமை இந்தி டப்பிங் உரிமை ஆகியவற்றையும் விற்பனை செய்தார். அந்த உரிமைகள் அனைத்தும் பெரும் தொகைக்கு விற்பனையாகின.

தமிழக உரிமை இறுதியாக நிலையில் ராக்போர்ட் நிறுவனம் வாரிசு படத்தை தமிழகத்தில் வெளியிட முடிவெடுத்தது. அதற்கான முயற்சி நடைபெற்ற நிலையில் ரெட் ஜெயின்ட் நிறுவனமும் வாரிசு திரைப்படத்தை வெளியிட விரும்பியது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன. ரெட் ஜெயின்ட் நிறுவனம் வாரிசு படத்தை வெளியிட நினைத்ததால், பேச்சு வார்த்தையில் இருந்த நிறுவனங்கள் பின்வாங்க தொடங்கின. இதனால் பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய படங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு தான் தற்போது வாரிசு பட உரிமையை ரெட் ஜெயண்ட்டுக்கு விஜய் தர மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் லலீத் குமார் தான் கைப்பற்றி இருக்கிறாராம். இதனால் பொங்கலுக்கு தியேட்டர்களை கைப்பற்ற இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டியே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top