Celebrities
அவங்க எதிர்பார்ப்பதை என்னால் செய்யமுடியாது.! விஜய் டிவி-யை வெறுத்து ஒதுக்கிய முன்னணி தொகுப்பாளினி..!
பிரபல தனியார் தொலைக்கட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் VJ பாவனா, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம்பிடித்தார்.

ஆனால் சமீப காலமாக என்டர்டைன்மென்டில் நிகழ்ச்சிகளில் இருந்து விலகி ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் VJ பாவனா.
அந்த வகையில் கடைசியாக நடந்த பல முக்கிய ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளை பாவனா தான் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் சமீபத்தில் VJ பாவனா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது :
விஜய் டிவி பக்கம் இனி நான் போக வேண்டாம்னு நினைச்சிருக்கேன். ஏன்னா அவங்க ஸ்டைலும் என் ஸ்டைலும் இப்ப வேற ஆகிடுச்சு. அவங்க இப்ப அணைத்து நிகழ்ச்சிகளையும் காமெடியா கொண்டு போவதில் மட்டுமே அதிகம் ஃபோகஸ் செய்றாங்க. எனக்கு அது அவ்வளவா வர மாட்டேங்குது என ஓபனாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது பாவனா ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
