Connect with us

உள்ளாட்சி தேர்தலில் அசத்திய விஜய் மக்கள் இயக்கம்…முழு விவரம்

Cinema News

உள்ளாட்சி தேர்தலில் அசத்திய விஜய் மக்கள் இயக்கம்…முழு விவரம்

நடிகர் விஜய் தான் அரசியலில் வரமாட்டேன் என உறுதியாக இருந்தபோதிலும், தமிழ்நாடு கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவரது ரசிகர் சங்க உறுப்பினர்கள் சுமார் 59 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அக்டோபர் 12, செவ்வாய்க்கிழமை, ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், தளபதி விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்களாக உள்ள 59 வேட்பாளர்கள் பல்வேறு உள்ளாட்சி இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் 27,003 பணியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது மற்றும் தேர்தல் முடிவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆளும் கட்சியாக உள்ள திமுக அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக-க்கு படுதோல்வியாய் அமைந்துள்ளது.

பல வருடங்களாக நடந்த வரும் பல கட்சிகள் இதில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

ஆம், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வார்டு உறுப்பினர்கள் பதவிகளை கைப்பற்றியுள்ளனர்.

இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி மகிழ்வித்து வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top