நடிகர் விஜய்யின் ‘லயோலா’ நாட்கள்…பிரபல தொகுப்பாளர் வெளியிட்ட throwback புகைப்படம்…செம வைரல்…!

0
194

2002ம் ஆண்டு முதல், முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில் பல சின்னத்திரை நாடகங்களில் நடிகராக வளம் வருபவர் தான் சஞ்சீவ் வெங்கட். பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வளம்வந்தாலும் அதற்கு முன்பாகவே 1989ம் ஆண்டு பிரபல இயக்குநர் வாசு இயக்கத்தில் வெளியான பொன்மன செல்வன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். தளபதி விஜய் நடிப்பில் ஆரம்பகாலத்தில் வெளியான சந்திரலேகா, நிலவே வா மற்றும் பத்ரி போன்ற படங்கள் தொடங்கி புதிய கீதை முதல் இன்று மாஸ்டர் படம் வரை பல படங்களில் இவர் அவரோடு இணைந்து நடித்துள்ளார்.

அவரோடு இணைந்து நடித்தது மட்டும் அல்ல, இவர் விஜயின் மிக நெருக்கமான நண்பர் என்பதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பிரபலமாகி வருகின்றது throwback புகைப்படங்களை வெளியிடும் வழக்கம். இந்நிலையில் தற்போது சஞ்சீவும் ஒரு அழகிய throwback புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சஞ்சீவ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில் “தளபதி விஜயுடன் கல்லூரி நாட்களில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.”, தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது