Connect with us

“என் அப்பாவும் தற்கொலைதான் செய்து கொண்டார்! தற்கொலை குறித்து விஜய் ஆன்டனி கூறிய தகவல்! Viral Throwback!”

Cinema News

“என் அப்பாவும் தற்கொலைதான் செய்து கொண்டார்! தற்கொலை குறித்து விஜய் ஆன்டனி கூறிய தகவல்! Viral Throwback!”

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது அப்பாவும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதை அவரே கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திரைப்பட விழா ஒன்றில் விஜய் ஆண்டனி பேசியபோது ’தற்கொலை என்பது தீர்வு இல்லை, எந்த கஷ்டம் வந்தாலும் தற்கொலை மற்றும் செய்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசும்போது ’என்னுடைய தந்தை தற்கொலை செய்து கொண்டார். அப்போது எனக்கு ஏழு வயது, என் தங்கைக்கு 5 வயது. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது என்னுடைய பர்சனல் விஷயம், இருப்பினும் அது ஒரு பெரிய விஷயம் இல்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால் என் அப்பா தற்கொலைக்கு அப்புறம் என்னுடைய அம்மா இரண்டு கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி கஷ்டப்பட்டார் என்பதை நான் நேரில் பார்த்தேன், அந்த வலி எனக்கு மிக அதிகம். நான் அமைதியாக இருக்கிறேன், அழுத்தமாக இருக்கிறேன், சரியாக பேச மாட்டேன் என்றால், அதற்கு இதுதான் காரணம்.

எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும், நிறைய அனுபவித்து விட்டேன், நிறைய பேரை பார்த்து விட்டேன், நான் ஒன்னும் பேச தெரியாமல் அமைதியாக இல்லை, பேச தெரியும், ஆனால் பேசி என்ன பயன் என்று தான் அமைதியாக இருக்கிறேன்’ என்று கூறினார். வாழ்க்கையில் ஒருவருக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தற்கொலை மட்டும் செய்து கொள்ளாதீர்கள் என்று விஜய் ஆண்டனி மற்றவர்களுக்கு அறிவுரை கூறிய நிலையில் அவருடைய மகளே இன்று தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "தளபதி விஜய்யின் 'LEO' படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?! இது நம்ம லிஸ்டலேயே இல்லையே!"

More in Cinema News

To Top