Connect with us

மகளின் உடலை கண்ணீருடன் வீட்டுக்கு கொண்டு வந்த விஜய் ஆண்டனி…ஆறுதல் சொல்லி வரும் பிரபலங்கள்!

Cinema News

மகளின் உடலை கண்ணீருடன் வீட்டுக்கு கொண்டு வந்த விஜய் ஆண்டனி…ஆறுதல் சொல்லி வரும் பிரபலங்கள்!

விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் இது அனைவருக்குமே மிக பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது…16 வயதே ஆகும் மீராவின் இந்த விபரீத முடிவு பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது…மீராவின் மறைவால் நடிகர் விஜய் ஆண்டனியும், அவரது குடும்பத்தினரும் மனமுடைந்து உள்ளனர்.

அவர்களுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய தேனாம்பேட்டை போலீசார் உடற்கூறாய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்… அங்கு இன்று காலை 10 மணிக்கு விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர் அதற்காக வீட்டின் முன் பலரும் காத்திருந்தனர்..

மகளின் உடலை கண்ணீருடன் சுமந்து வந்த விஜய் ஆண்டனி ஆம்புலன்ஸில் வைத்த காண்போரை மிகவும் கண்கலங்க செய்தது. இதையடுத்து டிடிகெ சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு மீராவின் உடலை கொண்டு வந்தனர்.அங்கு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலிக்காக மீராவின் உடல் வைக்கப்பட்டு உள்ளது.

மகளின் மரணத்தால் துவண்டு போய் உள்ள விஜய் ஆண்டனிக்கு பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்…இதனை பார்க்க மிகவும் வேதனையாகத்தான் உள்ளது,இவருக்கு இப்படி ஒரு சோகமா என்பது போல இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அக்டோபரில் தொடங்கும் தல,தளபதி படங்கள்…மீண்டும் போட்டிக்கு ரெடி போல!

More in Cinema News

To Top