Connect with us

ஆசையாய் வளர்த்த பிள்ளை இப்படி யாருக்கும் சொல்லாம போயிட்டியே…தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜய் ஆண்டனி மகள்!

Cinema News

ஆசையாய் வளர்த்த பிள்ளை இப்படி யாருக்கும் சொல்லாம போயிட்டியே…தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜய் ஆண்டனி மகள்!

இன்று மிக பெரிய சோகம் நடந்துள்ளது அதாவது நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மகள் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி.சக்சஸ்புல் இசையமைப்பாளராக வலம் வந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்…இப்படமும் மிக பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதன்பின்னர் சலீம்,கொலைகாரன்,இந்தியா பாகிஸ்தான், யமன், காளி, திமிரு புடிச்சவன் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பிச்சைக்காரன் தான்…இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார்…இவரது மகள் லாரா என்ற மீரா சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் மின் விசிறியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர்…அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதன் மூலம் பெரும் மன உளைச்சலில் குடும்பம் உள்ளது..அவரது குடும்பத்திற்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்த வாரம் OTT-யில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்..Worth Weekend Guaranteed!

More in Cinema News

To Top