Connect with us

விடுதலை படத்தின் நடிகை பவானி யார் தெரியுமா…!!

Cinema News

விடுதலை படத்தின் நடிகை பவானி யார் தெரியுமா…!!

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் நடிகை பவானி ஸ்ரீ நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெற்றிமாறனின் விடுதலை படம் நாளை மறுநாள் வெளியாகிறது. நடிகர் விஜய் சேதுபதி – சூரி ஆகியோருடன் இந்தப் படத்தில் படத்தின் நாயகியாக புதுமுக நடிகை பவானி ஸ்ரீ அறிமுகமாகியுள்ளார்.

இவர் வேறு யாருமில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானாவின் மகள் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை ஆவார்.

‘சாக்லேட்’ படத்தில் இடம்பெற்ற ’மல்ல மல்ல மருதமலை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த ஏ.ஆர்.ரைஹானா தொடர்ந்து கோலிவுட்டில் இசையமைப்பாளர், பாடகி என வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடகராக வலம் வந்து 2006ஆம் ஆண்டு இசையமைப்பாளராகி பெரும் புகழ்பெற்ற ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் முன்னதாக தன் தாய் மற்றும் சகோதரர் வழியில் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த பவானி ஸ்ரீ, ஏற்கெனவே க.பெ. ரணசிங்கம், நண்பன் ஒருவன் வந்த பிறகு படங்களில் நடித்துள்ளார்.

தற்போது விடுதலை படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவானி ஸ்ரீ இந்தப் படத்தின் வெளியீட்டை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளார்.

இந்நிலையில் விடுதலை படத்துக்காக தன் சகோதரி மகள் பவானி ஸ்ரீக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி மாமா என பவானி ஸ்ரீ பதிலளித்து பதில் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - புஷ்பா 2 பட நடிகர்கள் பலத்த காயம் - கவலையில் ரசிகர்கள்

More in Cinema News

To Top