இளையராஜாவே அந்த காலத்தில் பாடல்களை காப்பி தான் அடித்துள்ளார்!!! வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட ரசிகர்கள்….

0
142

தற்போது தமிழ் நாட்டில் தீயாய் பரவும் செய்தி இளையராஜா பற்றியது தான். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் 96 படத்தில் என் பாடல்களை அவர்கள் பயன்படுத்தியிருக்க கூடாது. அந்த இசையமைப்பாளர் சொந்தமாக இசையமைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வது ஆண்மையற்ற செயல் எனவும் கூறினார். இவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. அதற்க்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இளையராஜாவே அந்த காலத்தில் பிறமொழி பாடல்களில் இருந்துதான் இசையை காப்பியடித்துள்ளதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். எந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.