கணவரை காணவில்லை!!! அதிர்ச்சி விடியோவை வெளியிட்ட பாபநாசம் பட நடிகை…

0
146

மலையாள திரையுலகின் முக்கிய நடிகரான ஆஷா சரத் அங்கு பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2015 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பாபநாசம் திரைப்படத்தின் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதன் பின் கமலஹாசனுடன் இணைந்து தூங்காவனம் படத்திலும் நடித்தார்.

#Evidey

#Evidey Promotion video

Posted by Asha sharath on Wednesday, July 3, 2019

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அதில் தனது கணவரை காணவில்லை. கண்டுபிடிப்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என தெரிவித்திருந்தார். இது அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் தான் தெரியவந்தது அவர் அடுத்ததாக நடித்து வரும் எவிடே என்ற படத்தின் ப்ரோமோஷனுக்கு தான் அப்படி பேசினாராம். இதனையறிந்த மக்கள் அவரை சமூகவலைத்தனங்களில் கடுமையாக திட்டி தீர்த்தவண்ணம் உள்ளனர்.