Connect with us

விஜய்க்கு சொன்ன கதை முதலில் இந்த நடிகருக்கு சொல்லிய கதையா!!

Cinema News

விஜய்க்கு சொன்ன கதை முதலில் இந்த நடிகருக்கு சொல்லிய கதையா!!

கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் ஒரு ஹாட் டாபிக் ஓடிக்கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்று வெளியான அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தின் கதையை கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் வெங்கட் பிரபு சொல்லிவிட்டதாகவும் அந்தக் கதையை இப்போது விஜய் டிக் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட சூழலில் விஜய் அந்தப் படத்துக்காக 200 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என தகவல்கள் வெளியாகின.

ஆனால் அது வெறும் வதந்திதான், லியோவுக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதே சம்பளத்தைத்தான் இந்தப் படத்துக்கும் அவர் பெறுவார் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம், இந்தப் படத்துக்காக விஜய் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பளம் பெறுவது உறுதிதான் எனவும் புதிய தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது.

இந்நிலையில் மாநாடு படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா மூலம் ரஜினிக்கு வெங்கட் பிரபு இரண்டு கதைகள் கூறியதாகவும் ஆனால் அந்தக் கதைகள் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இச்சூழலில் ரஜினிக்கு எழுதிய இரண்டு கதைகளில் ஒரு கதையைத்தான் விஜய் ஓகே செய்திருப்பதாக பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மேடையில் சேர்ந்து பாடிய 'புயல்கள்' வைரலாகும் வீடியோ இதோ!

More in Cinema News

To Top