Connect with us

மாநாடு பட காட்சிகளை ஆர்வக்கோளாறில் மொபைல் போனில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்..! ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த வெங்கட் பிரபு..

Cinema News

மாநாடு பட காட்சிகளை ஆர்வக்கோளாறில் மொபைல் போனில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்..! ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த வெங்கட் பிரபு..

தமிழ் சினிமாவின் ரொமான்டிக் நாயகன் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பல முன்னணி நடிகர்களின் அட்டகாச நடிப்பில் உருவாகி பல தடைகளை தாண்டி வெளிவந்துள்ள திரைப்படம் ‘மாநாடு’.

இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு பிரமாதமாக இயக்கியுள்ளார். கடந்த வியாழன் (25.11.2021) அன்று இந்த திரைப்படம் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியானது.

விடியற்காலை காட்சிகளை பாக்க முடியாமல் போனாலும் வெயிட் செய்து மாநாடு படத்தை பார்த்த ரசிகர்களுக்கு சரியான விருதை அமைந்தது அந்த திரைப்படம்

மூன்று நாட்கள் ஆகியும் ரசிகர்கள் இடையே இந்த படம் அமோக வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது . இந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, படத்தை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநாடு குறித்து வெங்கட் பிரபு ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது :

மாநாடு திரைப்படத்தின் மீது நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தி வரும் அதீத அன்புக்கு நன்றி. இந்த திரைப்படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து, அதனை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது குற்றம். அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் காணட்டும்” என தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

More in Cinema News

To Top