Connect with us

உதயநிதி போட்ட திடீர் ட்வீட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்..

Cinema News

உதயநிதி போட்ட திடீர் ட்வீட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்..

இந்த வருட பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களில், பொங்கல் வின்னர் யார் என்பது குறித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

விஜய்- அஜித் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ‘வாரிசு’ படமும் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.ஒரு சிலர் இதனை கலாய்த்தும் வருகின்றனர்..

இரண்டு படங்களும் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகும் நிலையில், தமிழகத்தில் ‘துணிவு’ திரைப்படம் இதுவரை 65 கோடி வசூல் செய்துள்ளதாகவும், வாரிசு திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

cinemamedai

மேலும் உலக அளவில் ‘துணிவு’ திரைப்படம் மூன்றே நாட்களில் 100 கோடியை எட்டிய நிலையில், ‘வாரிசு’ திரைப்படமும் தற்போது 100 கோடியை எட்டி உள்ளது. அதைப்போல் ஜனவரி 14ஆம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் வெளியாகி டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாளே படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது. அதே போல் ‘துணிவு’ திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் இப்படத்தின் வெற்றியை கொண்டாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு படங்களுக்குமே தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ‘துணிவு’ திரைப்படத்தின் தமிழகத்தின் ஒட்டு மொத்த வெளியீட்டு உரிமையையும், ‘ வாரிசு’ திரைப்படத்தை தமிழகத்தில் சில பகுதிகளிலும் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம், பொங்கல் வின்னர் யார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது.

இதில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் தான் என தன்னுடைய பதிவை போட்டுள்ளதால் சண்டைக்கு வாய்ப்பில்லாத வகையில் முடிந்துள்ளது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top