Connect with us

IT’S TIME TO GIVE IT BACK MAAME.. சிம்புவின் குரலில் தீயாய் வெளியானது தீ தளபதி பாடல்..!!

Cinema News

IT’S TIME TO GIVE IT BACK MAAME.. சிம்புவின் குரலில் தீயாய் வெளியானது தீ தளபதி பாடல்..!!

விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்தின் இரண்டாம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு மொழிகளில், வரும் 2023 பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. படம் வெளிவர இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.

அதே நேரம் படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழு தொடங்கியுள்ளது. இதன்படி சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியானது. விஜயே இந்த பாடலை பாடியிருந்தார். தமன் இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடம் சூப்பர் டூப்பர் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது பாடலாக தீ தளபதி என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரபல நடிகர் சிம்பு பாடியுள்ளார். சிம்பு ஏற்கனவே பல படங்களில் பாடியிருந்தாலும், விஜய் படத்தில் பாடுவது இதுவே முதல் முறையாகும்.

தற்கிடையே, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வின்போது வாரிசு படத்தின் டிரெய்லரும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top