Connect with us

ரஞ்சிதமே பாடல் இந்த பாட்டின் காப்பியா..? சர்ச்சையில் சிக்கிய வாரிசு பர்ஸ்ட் சிங்கிள்..!!

Cinema News

ரஞ்சிதமே பாடல் இந்த பாட்டின் காப்பியா..? சர்ச்சையில் சிக்கிய வாரிசு பர்ஸ்ட் சிங்கிள்..!!

தளபதி வாரிசு படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே இன்று வெளியாகியுள்ள நிலையில், பாடல் வெளியாகி சிறிது நேரத்திலேயே காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாகும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.

வாரிசு படத்திற்கான புரமோஷன் வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தமன் இசையில், வாரிசு படத்தில் இடம்பெற்ற “ரஞ்சிதமே” பாடல் இன்று வெளியானது. இந்நிலையில், பாடல் வெளியான சில மணி நேரங்களில் இந்த பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கி ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

ரஞ்சிதமே பாடல் தெலுங்கில் நடிகர் ரவி தேஜா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த கிராக் என்ற படத்தில் இடம்பெற்ற மாஸ் பிரியாணி என்ற பாடல் மெட்டுடன் ஒத்து போவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அந்த மாஸ்டர் பிரியாணி பாடலுக்கும் தமன் தான் இசையமைத்திருந்தார் என்பதால், தன்னுடைய பாடல் மெட்டையே தமன் காப்பியடித்து மீண்டும் பயன்படுத்தியுள்ளார் என விளாசி வருகின்றனர்.

ஒருபக்கம் இந்த விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும், வாரிசு படத்தின் முதல் பாடலை தளபதி விஜயே பாடியுள்ளதால், அவரது ரசிகர்கள் டபுள் சந்தோசத்துடன் ரசித்து மகிழ்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top