Connect with us

வாரிசு படத்திற்கு அடுத்த சிக்கல்.. விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்..!!

Cinema News

வாரிசு படத்திற்கு அடுத்த சிக்கல்.. விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்..!!

தெலுங்கில் வாரிசு படம் ரிலீஸாகுமா என்பதே சிக்கலில் உள்ள நிலையில், தற்போது வாரிசு படத்திற்கு விலங்குகள் நல வாரியம் மூலம் புது சிக்கல் உருவாகியுள்ளது.

பிரபல தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு என்ற படத்தில் நடித்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நேரடியாக வெளியிடப்படுகிறது. பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் விஜய் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

2023 பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில், பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கூறிவிட்டதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்களில் மிக குறைவான எண்ணிக்கையிலான தியேட்டர்களில் மட்டுமே வாரிசு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதற்கு காரணம், வாரிசு பட இயக்குனரான தில் ராஜு முன்பு சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தின் தெலுங்கு ரிலீஸின்போது அதை அதிக தியேட்டர்களில் வெளியிட மறுத்து காட்டிய கெடுபிடி விதிகள் தான் எனவும், அவர் போட்ட விதிகள் இப்போது அவரது படத்திற்கே எதிர்வினையாக மாறி நிற்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

இந்நிலையில், வாரிசு படத்திற்கான படப்பிடிப்பில், விலங்குகள் நல வாரியத்தில் முன் அனுமதி எதுவும் பெறாமல் 5 யானைகளை வைத்து ஷூட்டிங் நடத்தப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இது குறித்து விலங்கு நல வாரியத்திற்கு புகார் சென்ற நிலையில், விலங்குகள் நல வாரியம் வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் நோட்டீஸிற்கு பதில் அளிக்க மறுத்தால், உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இதற்கிடையே, தொடர்ந்து விஜய் படத்திற்கு சிக்கல் மேல் சிக்கல் வரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top