Connect with us

வெளியான அரைமணி நேரத்தில் ஒரு மில்லியன் வியூஸ்.. வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கள் புரோமோ தெறி ஹிட்..!!

Cinema News

வெளியான அரைமணி நேரத்தில் ஒரு மில்லியன் வியூஸ்.. வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கள் புரோமோ தெறி ஹிட்..!!

நடிகர் விஜய்யின் வாரிசு முதல் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 6.30க்கு வெளியான நிலையில், அரை மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வைகளை கடந்து ஹிட்டடித்துள்ளது

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக எக்ஸ்பிரஸ் குயின் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படம் ஆக்ஷன், எமோஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்து கட்டிய ஒரு மசாலா படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நேரடியாக வெளியாகிறது. படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலின் புரோமோ இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் குரலில் “ரஞ்சிதமே” என்ற இந்த புரோமோ வெளியாகி அரைமணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top