Connect with us

படம் வந்து 12 நாட்கள் ஆகியும் போட்டி!!வென்றது துணிவா வாரிசா “Collection Report இதோ”

Cinema News

படம் வந்து 12 நாட்கள் ஆகியும் போட்டி!!வென்றது துணிவா வாரிசா “Collection Report இதோ”

வாரிசும் துணிவும் ரிலீஸ் ஆகி 13 நாட்கள் ஆகிவிட்டது இந்நிலையில்,12-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பொறுத்தவரை விஜய்யின் வாரிசு திரைப்படம் அஜித்தின் துணிவை விட டபுள் மடங்கு கலெக்‌ஷனை அள்ளி உள்ளது.குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கின்றனர் என்பதே உண்மை..

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆனது.

இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், பாக்ஸ் ஆபிஸில் இரு படங்களும் வசூலை வாரிக் குவித்து வருகின்றன.

துணிவு ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்ததால் இப்படத்திற்கு செம வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்து வருகிறது.மறுபுறம் வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பதால் இப்படத்தை பேமிலி ஆடியன்ஸ் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

துணிவு திரைப்படம் 12 நாள் முடிவில் உலகளவில் ரூ.200 கோடி கலெக்‌ஷனை கடந்துள்ளது.அதேபோல் விஜய்யின் வாரிசு திரைப்படம் 12 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.220 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக விடுமுறை தினமான நேற்று வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்தை விட டபுள் மடங்கு கலெக்‌ஷனை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு திரைப்படம் நேற்று ஒரே நாளில் ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், துணிவு திரைப்படம் ரூ.4.5 கோடி மட்டுமே வசூல் ஈட்டி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருபக்கம் துணிவு படத்துக்கு ரசிகர்கள்,தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் ஆதரவை தந்தாலும் வாரிசு ஒரு பக்கம் ஹிட் அடித்துள்ளதாக சொல்லப்படுகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top