Connect with us

வலிமை படத்தின் கதை நடிகர் அஜித்துக்காக எழுதவில்லை..?அப்ப அந்த பர்ஸ்ட் சாய்ஸ் ஹீரோ யார்..?

Cinema News

வலிமை படத்தின் கதை நடிகர் அஜித்துக்காக எழுதவில்லை..?அப்ப அந்த பர்ஸ்ட் சாய்ஸ் ஹீரோ யார்..?

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் தற்போது தமிழ்த் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகும், மேலும் இந்த த்ரில்லரின் அதிரடி காட்சிகளின் BTS மேக்கிங் கிளிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் படம் குறித்த பல்வேறு அறிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Ajith's 'Valimai' making video sets internet on fire

அதில் அவர் கூறியிருப்பதாவது:”இதுதான் நான் எழுதிய இரண்டாவது கதை. இது வேறொரு ஹீரோவுக்காக எழுதியது. இந்தக் கதையின் வேறொரு வடிவத்தை நான் முதலில் எழுதியிருந்தேன். அப்போது அது ஒரு போலீஸ் கதையாக இருக்கவில்லை. இன்று நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் பார்க்கிறோம். இன்று இருக்கும் இளைஞர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்க்கிறோம். அதுபோன்ற இரண்டு பிரச்சினைகளை நான் எடுத்துக் கொண்டேன். அந்தப் பிரச்சினைகள் ஹீரோவின் குடும்பத்தில் ஏற்பட்டால் என்னவாகும்? அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் அந்தக் கதை.

Ajith's photos from Valimai sets in Russia go viral | The News Minute

இதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டு அதை ஒரு புதிய கதையாக மாற்றியிருக்கிறேன். என்னுடைய பக்கத்திலிருந்து நான் எந்தவித சமரசமும் செய்யவில்லை. என்னைப் போன்ற இயக்குநர்கள் ஒரு பெரிய ஸ்டாருடன் பணியாற்றும்போது பார்வையாளர்களுக்காக எடுக்கும் படத்தில் போடும் உழைப்பில் 10 சதவீதத்தைக் கொடுத்தால் போதும். ஒரு பெரிய நடிகரின் படத்தை ரசிகர்களே கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து விடுவார்கள் என கூறி உள்ளார் .

இருப்பினும்,வலிமை திரைக்கதையை உருவாக்கிய மற்ற நடிகர் யார் என்பதை வினோத் பகிரவில்லை. சூப்பர் ஸ்டார் நடிகர் அஜித் குமார் திரைக்கதைக்குள் நுழைந்து கதைக்களத்தை அஜித் அவருக்காக எதையும் மாற்றாமல் இருந்துஉள்ளதாக என்றும் வலிமை இயக்குனர் மேலும் கூறினார். ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வலிமை உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

More in Cinema News

To Top