Connect with us

தள்ளிப்போகுதா வலிமை பட ரிலீஸ்..?படக்குழு இந்த மாதம் வந்தா தான் ரிலீஸ் பண்ணுவாங்க போல..?

Cinema News

தள்ளிப்போகுதா வலிமை பட ரிலீஸ்..?படக்குழு இந்த மாதம் வந்தா தான் ரிலீஸ் பண்ணுவாங்க போல..?

இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருந்த, தல அஜித்தின் 60 வது படமான ‘வலிமை’ படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிலீஸ் படங்களில் ஒன்றாகும். ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் தல அஜித் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவதால் ஸ்டண்ட் மற்றும் அதிரடி காட்சிகளில் இந்த பொழுதுபோக்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து சமீபத்தில் வலிமையின் முதல் சிங்கள் பாடல் வெளியானது.

ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்ற வலிமையின் நாங்க வேற மாதிரி பாடல் யூடியூப்பில் அதிக பார்வைகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் வெளியிட்டிற்காக காத்துகொண்டு இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், அக்டோபர் மாதம் அல்லது தீபாவளியில் வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என தகவல் பரவி வருகிறது.

More in Cinema News

To Top