Connect with us

கதை திருட்டில் மீண்டும் வசமாக சிக்கிய வலிமை…! லாபத்தில் பல கோடிகளை பங்காக கேட்கும் மெட்ரோ படக்குழு…

Celebrities

கதை திருட்டில் மீண்டும் வசமாக சிக்கிய வலிமை…! லாபத்தில் பல கோடிகளை பங்காக கேட்கும் மெட்ரோ படக்குழு…

பண தேவை ஒரு மனிதனை எப்படி திசை மாற்றுகிறது என்பதை சுவாரசியம் குறையாமல் சொன்ன திரைப்படம் மெட்ரோ. பாபி சிம்ஹா, யோகி பாபு, சிரிஷ், சென்றாயன் என அனைவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது இந்த படம்.

குறைந்த பட்ஜெட் இல் எடுக்கப்பட்டு மிக பெரிய கலெக்சன் அள்ளிய திரைப்படம் என்று இதை சொல்லலாம். ஒரு சாதாரண மனிதன் பண ஆசையில் எப்படி வழி மாறி செய்கிறான் இறுதியில் தன் தாயின் நகையையே திருடும் அளவுக்கு மாறி விட்டான் என இயக்குனர் அப்பட்டமாக காட்டி இருப்பார்.

இதே போல ஒரு கதையை எடுத்து வலிமை படக்குழு அஜித்தை வைத்து தனது பாணியில் படத்தை உருவாக்கி அதை வெளியிட்டு அமோக வெற்றியும் பெற்றுவிட்டது.

மெட்ரோ படத்தில் காட்டப்படுவது போன்று இந்த படத்திலும் நன்றாக படித்து வேலை கிடைக்காத விரக்தியில் ஒருவனுக்கு அடிமைகளாக மாறி தவறுகள் செய்யும் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என காட்டி இருப்பார்கள்.

இதை நன்றாக உற்று கவனித்தால் இதே தான் மெட்ரோ படத்திலும் காட்டி இருப்பார்கள். தற்போது இந்த விஷயம் பூதாகரமாக வெடித்து கதை திருட்டில் வந்து நின்று இன்று கோர்ட்டில் இயக்குனர், தயாரிப்பாளர் மீது கேஸ் பதிவாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top