Connect with us

எதார்த்த நாயகன் அருண் விஜய்க்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Cinema News

எதார்த்த நாயகன் அருண் விஜய்க்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில் கௌரவ கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரக அரசின் கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரக அரசு கோலிவுட்டின் பல முக்கிய பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை அவ்வப்போது வழங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் எதார்த்த நாயகனாக வலம் நடிகர் அருண் விஜய்க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அருண் விஜய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் .

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், சஞ்சய் தத், ஷாருக்கான், துல்கர் சல்மான், நடிகைகள் திரிஷா, காஜல் அகர்வால், மீனா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், பிரணிதா, மீனா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பெற்றுள்ளனர். இதையடுத்து எந்தெந்த பிரபலங்களுக்கு இந்த கோல்டன் விசா கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top