பாலியல் வன்கொடுமை செய்தவர்களால் தீ வைத்த உன்னாவ் இளம்பெண்…சிகிச்சை பலனின்றி மரணம்…!

0
118

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணின் காதலர் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது நண்பனுடன் இருக்கும் படியும் கட்டாயப்படுத்தியுள்ளார்.அவற்றை படம்பிடித்து வைத்து மிரட்டல் விடுத்த நிலையில் இருவர் மீதும் அந்த பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.இந்நிலையில்,அந்த இருவரில் ஒருவர் கைதாகி சிறையில் உள்ள நிலையில் ,மற்றொரு நபரான தேடப்படும் நபர் அந்த இளம் பெண் தனியாக செல்லும் பொழுது அவளை பழிவாங்கும் நோக்கில் 5 பேர் வழிமறித்திருக்கிறார்கள்.

பெண்ணின் தலையில் அதில் ஒருவர் தாக்கியதோடுகழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். கதறித் துடித்த அந்த பெண் மீது மண்ணெண்ணெயை ஊற்றி 5 பேரும் தீ வைத்துள்ளனர். உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அந்த பெண் அலறியபடி உதவி கேட்டு ஓடியுள்ளார்.அவரைப் பார்த்த பக்கத்து கிராமத்தினர் சூனியக்காரி என நினைத்து பயந்துபோய் உதவி செய்யத் தயங்கியுள்ளனர். உடலில் தீக்காயங்களோடு ஒரு கையில் செல்போனும், மறு கையில் மணி பர்சுமாக ஒரு கிலோ மீட்டர் ஓடி வந்த நிலையில் விவசாயி ஒருவரும், அவரது மனைவியும் அந்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளனர். தீப்பற்றிய உடலில் போர்வை போர்த்தியதுடன் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து அந்த பெண் பேச உதவி செய்துள்ளனர்.

நேற்று மாலையில் லக்னோவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் தற்போது சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடலில் 90 விழுக்காடு வரை தீக்காயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தன் மீது தீ வைத்ததாக அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11.10 மணியளவில் அந்த பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரவு 11.40 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.