டி20 தொடரில் ஷிகார் தவானுக்கு பதிலாக மாற்றுவீரர்கள் அறிவிப்பு…!

0
70

இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் 24ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் டி20 தொடரிலிருந்து ஷிகார் தவான் காயம் காரணமாக விலக உள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியின் போது ஷிகார் தவானுக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஷிகார் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சனும் ஒரு நாள் தொடரில் ப்ரிதிவ் ஷா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.