பிகில் படத்தில் இந்திய அணியின் கால்பந்து வீரர்!! இது வேற லெவல்…

0
138

தளபதி விஜய் தற்போது நடித்துவரும் திரைப்படம் பிகில். அட்லீ இந்த படத்தினை இயக்கி வருகிறார். ags கல்பாத்தி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் நயன்தாரா, கதிர், யோகிபாபு மற்றும் இந்துஜா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். முதல் முறையாக விஜய் இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராகவும் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரரும், கேரளாவின் காவல்துறை அதிகாரியுமான விஜயன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். இதற்க்கு முன் இவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.