Connect with us

காபூல் நிலவரம் : நடுவானில் பறந்த விமானத்தில் தொங்கிய நிலையில் பயணித்த 2 பேர் பலி – பதைபதைக்கும் காட்சி

Featured

காபூல் நிலவரம் : நடுவானில் பறந்த விமானத்தில் தொங்கிய நிலையில் பயணித்த 2 பேர் பலி – பதைபதைக்கும் காட்சி

ஆப்கானிஸ்தானை விட்டுவிட்டு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறி வரும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு காபூலுக்குள் மீண்டும் தலிபான்கள் நுழைந்துள்ளனர். நான்கு பக்கங்களில் இருந்து தலைநகருக்குள் நுழைந்து காபூலை கைப்பற்றினர்.

இந்நிலையில், ஆப்கனுக்கு கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பி உள்ளது. ஏற்கனவே அங்கே 3,000 அமெரிக்க வீரர்கள் இருந்த நிலையில் தற்போது மேலும் 2,000 பேரை அமெரிக்கா அனுப்பி உள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் ஆப்கன் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தக் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்து விட்டதால், அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் உயிருக்கு அஞ்சி விமானத்திற்குள் செல்ல முடியாமல் மேற் கூரையில் ஆபத்தான மாதிரி பயணித்தது பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைத்து.மேலும் விமானத்தின் மேற்கூரையில் இருந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது

More in Featured

To Top