Connect with us

அதிர்ச்சி.. பிரபல டிவி நடிகை தற்கொலை..!! காரணம் என்ன..?

aakanksha mohan suicide

Cinema News

அதிர்ச்சி.. பிரபல டிவி நடிகை தற்கொலை..!! காரணம் என்ன..?

மும்பையின் வெர்சோவாவில் உள்ள ஹோட்டல் அறையில் 30 வயதான தொலைக்காட்சி நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. நடிகை தற்கொலை செய்துகொண்ட அறையில், நடிகை எழுதிய தற்கொலைக் கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த குறிப்பில், தனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல, அதனால் யாரையும் தொல்லை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை?

அகன்ஷா மோகன் எனும் அந்த நடிகை அந்தேரியில் உள்ள லோகந்த்வாலா வளாகத்திற்கு அருகிலுள்ள யமுனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். முதற்கட்ட விசாரணையில், நடிகை மன அழுத்தத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன், வெர்சோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தூக்கிலிட அறையை பதிவு செய்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ​​அறையில் தற்கொலை கடிதம் இருந்தது. அந்த குறிப்பில், சுய விருப்பத்துடன் தனது உயிரை விட முடிவு செய்ததாக எழுதியுள்ளார். இந்த செயலுக்கு வேறு யாரையும் குற்றம் சொல்லக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தற்கொலையில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர் . எனினும் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top