Connect with us

“என்னாது LEO Second Single, வடிவேலுவின் கைப்புள்ளை பிஜிஎம்மா? Troll செய்யும் ரசிகர்கள்!”

Cinema News

“என்னாது LEO Second Single, வடிவேலுவின் கைப்புள்ளை பிஜிஎம்மா? Troll செய்யும் ரசிகர்கள்!”

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் வேலையில் படக்குழுவினர் மிகவும் மும்மரமாக ஈடுபட்டு இருந்தனர்.

செப்டம்பர் 30 ஆம் தேதி நடக்கயிருந்த இந்த ஆடியோ லாஞ்ச், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்ட என்ன படம் அப்டேட் வெளியாகும் என்ற வகையில் லியோ படக்குழு ஒரு முடிவில் இருக்கிறார்கள்.

அதன் படி படத்தின் இரண்டாவது பாடலான, BADASS இன்று மாலை 6 வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. இது தொடர்பான ப்ரோமோ நேற்று வெளியானது. இந்நிலையில் BADASS பாடல் ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கும் ஆடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

அதாவதது வடிவேலுவின் வின்னர் படத்தில் இடம் பெற்று இருக்கும் BGM போலவே BADASS பாடல் பிஜிஎமும் அமைந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் இரண்டையும் ஒப்பிட்டு, என்னது லியோ பாடல் காபி அடிக்கப்பட்டு எடுக்கப்பட்டதா என கலாய்த்து வருகின்றனர். ஒரு சிலரோ நாலா பக்கமும் சுத்தி சுத்தி அடிக்கும் பிரச்னை மத்தியில் இது என்ன புதுசா இருக்கிறது என பேசி வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'STR 48' படத்திற்காக வெறித்தனமாக தயாராகி வரும் நடிகர் சிம்பு..!! வைரலாகும் ஒர்கவுட் வீடியோ…

More in Cinema News

To Top