Connect with us

கார்த்திக்கை தேடி சென்ற டிக் டாக் பிரபலம் திவ்யா கைது..! நீயலாம் ஒரு பொண்ணாமா ரிஆக்சனில் போலீஸ்..!

General News

கார்த்திக்கை தேடி சென்ற டிக் டாக் பிரபலம் திவ்யா கைது..! நீயலாம் ஒரு பொண்ணாமா ரிஆக்சனில் போலீஸ்..!

தஞ்சாவூர் மருங்குளம் பகுதியை சேர்ந்த இவர் தான் திவ்யா. டிக் டாக் செயலி மூலம் இவர், வீடியோக்கள் வெளியிட்டு தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார்.

சமீபத்தில் தன்னை காதலித்து ஏமாற்றிச் சென்ற கார்த்தி என்பவரை தேடிச் சென்றபடி திவ்யா வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் புதுப்புது வாலிபர்கள் மூலம் தாலிக்கட்டி கொள்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

இந்நிலையில் கொரோனா காலத்தில் திருநங்கைகள் மக்களை மிரட்டி காசு பறிப்பதாக அண்மையில் வீடியோ ஒன்றை இவர் வெளியிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏராளமான திருநங்கைகள் திவ்யாவை காலில் விழ வைத்து, மன்னிப்பு கேட்க வைத்து, அதனையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இந்த பிரச்சனை அடங்குவதற்குள் மற்றொரு டிக் டாக் பிரபலமான தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகந்தி என்பவருடன் திவ்யாவுக்கு வீடியோக்கள் வெளியிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது .

இந்த தகராறு பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி லட்சுமி ராமகிருஷ்ணன் வரை சென்றது . இது தான் நல்ல வாய்ப்பு என பயன்படுத்தி கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் டிக் டாக் பிரபலங்கள் திவ்யா, சுகந்தியை முன்னணி தொலைக்காட்சி அலுவலகத்தில், எதிர் எதிரில் அமர வைத்து விசாரணை என்கிற பெயரில் பிரச்சனையை ஊதி பெரிதாகிவிட்டார் விட்டார்.

tiktok suganthi and karthi divya: கன்னித்தன்மை பரிசோதனை, அந்த ரூமில் என்னமோ  நடந்துடுச்சி, டிக்டாக் சுகந்தியால் கதறிய திவ்யா..! - Samayam Tamil

இதன் தொடர்ச்சியாக திவ்யா, சுகந்தி இருவரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கொருவர் தாக்கி, வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர். இவ்வாறு டிக் டாக் திவ்யா வெளியிட்ட வீடியோக்களில் ஒன்று தான் தற்போது அவரை சிறைக்கு அனுப்பி கம்பி எண்ண வைத்து இருக்கிறது.

இதுதொடர்பாக டிக் டாக் சுகந்தி கடந்த மாதம் 14ம் தேதி தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:

நாகலாபுரம் பகுதியில் உள்ள எனது வீட்டில் நான், எனது அக்கா நாகஜோதி, எனது தந்தை ராஜு மற்றும் எனது 16 வயது மகள் ஆகியோர் விபசார தொழில் நடத்தி வருவதாக யூ டியூபில் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த பிரபலம் டிக் டாக் திவ்யா அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் கூறியிருந்தார்.

இப்புகார் குறித்து சைபர் கிரைம் ஆய்வாளர் அரங்கநாயகி தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சுகந்தி உட்பட 4 பேர் மீது அவதூறு பரப்பி அவர்களுக்கு திவ்யா கலங்கம் ஏற்படுத்தியது தெரிந்தது. இதனால் போலீசார் டிக்டாக் திவ்யாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் பகுதியில் திவ்யா தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து தேனிக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் திவ்யாவை கைது செய்து, நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in General News

To Top