Connect with us

டிக்டாக் வீடியோவுக்காக உயிருடன் மீனை விழுங்கிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

General News

டிக்டாக் வீடியோவுக்காக உயிருடன் மீனை விழுங்கிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் 24 வயதான வெற்றிவேல்; கட்டிட வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி இரண்டரை வயதில் மகன் உள்ளார்; மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்

வெற்றிவேல் டிக்டாக் மற்றும் அதைப் போன்ற லைக்கீ செயலிகளில் வீடியோக்கள் பதிவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அதிக லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.ரு மீனை உயிருடன் விழுங்கப் போவதாகவும் அதை வீடியோவாக எடுக்கும்படியும் நண்பர்களிடம் கூறியுள்ளார். போதையில் இருந்த நண்பர்களும் சம்மதிக்கவே, குளத்தில் பிடித்த ஒரு மீனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்க முயன்றுள்ளார் வெற்றிவேல்.அப்போது மீன் தொண்டையில் அடைத்துக் கொண்டதால் வெற்றிவேல் மூச்சுவிட முடியாமல், மயங்கி சரிந்து விழுந்தார். நண்பர்கள் அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

உடற்கூறாய்வு முடிந்த பின்னர் வெற்றிவேலின் உடல் அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தன.

மதுபோதையில் மீனை விழுங்கி டிக் – டாக்-ல் அதிக லைக்குகளை பெற நினைத்து விளையாட்டாக செய்த செயலால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஓசூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in General News

To Top