Connect with us

துணிவு படத்தின் Pre Release report இதுதான்..

Cinema News

துணிவு படத்தின் Pre Release report இதுதான்..

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் “துணிவு”.

வரும் 11.01.2023 துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் உள்ளார்.எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Image

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் மக்களிடையே இன்னுமும் வைரலாகி வருகிறது.

Image

இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரிவியூ ஷோ,பிரபல ஃபோர் பிரேம்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பு திரையிடலில் நடிகை ஷாலினி அஜித்குமார்,தயாரிப்பாளர் போனி கபூர்,அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என கூறப்படுகிறது.அதனால் இந்த படத்தை பலர் பார்த்து Positive ரெஸ்பான்ஸ் தருகின்றனர்..

படம் பார்த்த பிறகு போனி கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிவு படத்தினை பார்த்து விட்டதாக மகிழ்ச்சியான பதிவை போட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top