Connect with us

இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் என்னென்ன லிஸ்ட் இதோ..!!

Cinema News

இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் என்னென்ன லிஸ்ட் இதோ..!!

தமிழ் சினிமாவில் வருகிற மே 19-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி, இசையமைத்து, நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற மே 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் கனிகா, விவேக், மகிழ் திருமேனி, மோகன் ராஜா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற மே 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழில் மகத், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஆரவ் ஆகியோர் நடித்துள்ள மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் வருகிற மே 19-ந் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தயாள் பத்மநாபன் இப்படத்தை இயக்கி உள்ளார். கிரைம் திரில்லர் படமாக இது தயாராகி உள்ளது. இதுதவிர விமலின் தெய்வமச்சான் திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்திலும், மஞ்சு வாரியர் நடித்த செண்டிமீட்டர் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன் உள்பட 6 இயக்குனர் இணைந்து இயக்கி உள்ள மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் வருகிற மே 18-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வெப் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். காதலை மையமாக வைத்து இந்த வெப் தொடர் தயாராகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு! மருத்துவமனை சென்று பார்த்துவரும் திரையுலக பிரபலங்கள்!

More in Cinema News

To Top