Connect with us

இந்த வாரம் OTT-யில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்..Worth Weekend Guaranteed!

Cinema News

இந்த வாரம் OTT-யில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்..Worth Weekend Guaranteed!

நம்முடைய தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அடியே திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது திரையரங்கில் ஓடி சக்ஸஸ் மீட் வரை கொண்டாடி இருந்தனர் படக்குழு…

கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான அடியே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.டைம் ட்ராவல் ஜானரில் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவான அடியே படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார். இந்தப் படம் சோனி லிவ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகவுள்ளது…இது ஒரு புதிய வகை படமாகும்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவான ‘குஷி’ திரைப்படம் இந்த மாதம் 1ம் தேதி வெளியாகியிருந்தது.ஷிவ் நிர்வாணா இயக்கத்தில் தெலுங்கில் உருவான இந்தப் படம், தமிழிலும் வெளியானது.

விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் ரொமான்ஸ் ப்ளஸ் கலர்ஃபுல் மேக்கிங் போன்றவற்றால், குஷி படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது…இப்படம் Netflix தளத்தில் இந்த வாரம் ஸ்ட்ரீமிங் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது இது ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையும் என சொல்லப்படுகிறது.

அதேபோல் மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.கேங்ஸ்டர் ஜானரில் உருவான கிங் ஆஃப் கோதா படத்துக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை….ஆனால் தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க அதிகம் எதிர்பார்பில் உள்ளனர்,அதனால் கிங் ஆஃப் கோதா இந்த வாரம் முதல் ஹாட்ஸ்டார் டிஸ்னி ப்ளஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இதை தவிர மற்ற மொழிகளிலும் ஒரு சில படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது,அதனால் இந்த வாரம் செம ட்ரீட் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "கடந்த 3 ஆண்டுகளாக நிறைய கஷ்டங்கள்…! Fight Club படம் குறித்து நடிகர் விஜய்குமார் உருக்கம்!"

More in Cinema News

To Top