தினம் ஒரு திருக்குறள்

0
141

“இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் 
துன்பத்துள் துன்பம் கெடின்”.

அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுக்குள் மிகுந்த துன்பமானது கெடுமானால், இவ்வுலகத்தில் இன்பம் இடையறாது வரும். அதாவது, துன்பங்களுக்கெல்லாம் மிகுந்த துன்பமான ஆசை என்னும் துன்பத்தை போக்கிவிட்டால், இடையறாது இன்பத்தை, பேரின்பத்தை அனுபவிக்கலாம்.

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

ஒருவர்க்கு பிறப்புக்குப்பின் வரும் முத்தியைத் தவிர இவ்வுலக இன்பங்களும் இடையறமால் வரும்! எப்போது? ஆசையென்னும் துன்பங்களிலெல்லாம் கொடுந்துன்பமானது தொலையும்போது. இதுவே இக்குறள் சொல்லுவது. துன்பங்களுக்குள் துன்பம் என்பதை, மற்றதுன்பங்களை இன்பமாக உணரச்செய்யக்கூடிய அளவுக்கு கொடிய துன்பம்.

“Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here