பிரிவுரைக்கும் வன்கண்ணர் …

0
189

“பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை”.

பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

தலைவன் கடமைக்காகப் பிரிகிறான். அதுபொழுது. தலைவியிடம் விடைபெற்றுச் செல்கிறான். அவன் சென்றவுடன் தலைவி அவன் ப்ரிந்ததன் அதிர்வில் இருந்து மீளமுடியாமல் அவனது செலவு பற்றி நினைக்கிறாள். அப்பொழுது “‘சென்று வருகிறேன்’ என்று என் முன்நின்று கூறும் அளவுக்குக் கல்மனம் கொண்டவரிடம், நம் ஆற்றாமை அறிந்து திரும்பி வந்து தன்னிடம் முன்போல நிறைஅன்பு காட்டுவாரா” என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறாள்.,

“If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up”.