எனைத்தானும் நல்லவை கேட்க …

0
503

“எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்”.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.

”எனைத்து’ , ‘அனைத்து’ என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன’ என்று உரை எழுதினார். இவர்கள் உரைப்படி எனைத்துஆயினும் என்பது ‘ஒரு கருத்தை எவ்வளவு கேட்டாலும், எக்காலம் கேட்டாலும்’ என்ற பொருள் தரும்.
அதுபோலவே ‘அனைத்துஆயினும் பெருமை’ என்பதும் ‘அவ்வளவிற்குப் பெருமை என்றும் எல்லாக் காலங்களிலும் பெருமை’ என்று பொருள் கொண்டனர். 

ஒரு சொல்லே கூட ஒருவரது வாழ்க்கையில் மார்றங்களுக்கு, வளர்ச்சிக்கு உதவியாக அமைய முடியும். மழை நீர்த்துளி சிறிது சிறுதாகச் சேர்ந்து பெருவெள்ளமாகிப் பயன்தரும் என்ற உவமை மூலம் பரிமேலழகர் இதை நயமுற விளக்கினார். பலதுளி பெருவெள்ளம் ஆவது போல் சிறிய சிறிய கேள்வியறிவும் சிறுது சிறிதாகச் சேர்ந்து கால ஓட்டத்தில் பேரறிவாய்ப் பெருகிப் பெரும் நன்மை அளிக்கும் என்பது கருத்து.