தினம் ஒரு திருக்குறள்

0
196

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை யானும் கெடும்”.

செய்யக் கூடாத செயல்களைச் செய்வதனாலும் கேடு உண்டாகும்; செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுதி உண்டாகும். முயற்சிக்கு எந்த வகையிலும் கேடு நேராவண்னம் திட்டமிடல் வேண்டும்.

ஏதேனும் ஒரு முயற்சி, செயல் அல்லது தொழில் தொடங்குமுன் அதைத் திட்டமிடுவது பற்றியது தெரிந்துசெயல்வகை அதிகாரம். அப்படித் திட்டமிடும்போது செய்வன செய்து, செய்யக்கூடாதன விலக்கி, மேற்கொள்ளப்போகும் செயலுக்குக் கேடு நேராவண்ணம் காத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது பாடல். தகாத செயல்களைச் செய்தாலும், செய்யவேண்டியவைகளைச் செய்யாமல் விட்டாலும் செயலுக்கு கேடு உண்டாகும் என்பதை உணர்ந்து முயற்சியைத் திட்டமிடவேண்டும் என்கிறது இது. ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்றவாறு அவற்றைக் கணித்து செயல் திட்டம் உருவாக்க வேண்டும்.

He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.