Connect with us

”லூடோ” கேமால் வந்த வினை…! தோற்கடித்ததால் மனைவியை முதுகெலும்பை உடைத்த கணவன்…

Featured

”லூடோ” கேமால் வந்த வினை…! தோற்கடித்ததால் மனைவியை முதுகெலும்பை உடைத்த கணவன்…

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் அங்குள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கில் அனைத்து கம்பெனிகளும் மூடப்பட்டதால், அவர் வேலையிழந்து வீட்டில் இருந்து வந்தார். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க அவரது மனைவி பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வந்தார்.

மேலும் அவர் பியூட்டிஷன் வகுப்பையும் முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் லூடோ கேம் ஆப்பை பதிவிறக்கம் செய்து நேரம் கிடைக்கும் போது விளையாடி வந்துள்ளார். வேலையின்றி வீட்டில் வெறுப்பாக இருந்த கணவருக்கும் அந்த கேமை பதிவிறக்கம் செய்து கொடுத்த அவர், தன்னுடன் விளையாடும்படி கூறினார். இதையடுத்து தனது கணவருடன் லூடோ கேமை விளையாடிவந்த பெண், தொடர்ச்சியாக அவரை தோற்கடித்துள்ளார்.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த நபர், தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்ததோடு, ” நீ என்னை மதிப்பதில்லை, என்னை எப்படி தோற்கடிப்பாய் என்றெல்லாம் கூறி அடித்து உதைத்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அப்பெண்ணுக்கு முதுகெலும்பே உடைந்துள்ளது. பின்னர், அந்த பெண் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவமனை உதவியுடன் அப்பெண்ணுக்கும், கணவருக்கும் மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top