Connect with us

திடீரென தோனியிடம் இருந்து வந்த அழைப்பு..சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த தினேஷ் காரத்திக்..! அப்படி என்னவாக இருக்கும்..?

Featured

திடீரென தோனியிடம் இருந்து வந்த அழைப்பு..சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த தினேஷ் காரத்திக்..! அப்படி என்னவாக இருக்கும்..?

இந்திய கிரிக்கெட் அணியில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஒரே நேரத்தில் தான் சேர்ந்தனர். ஆனால் தோனி தனது அபார திறமையால் முன்னுக்கு வந்து உலகம் போற்றும் மாபெரும் ஜாம்பவானாக உருவெடுத்துவிட்டார் . இந்த பக்கம் தினேஷ் கார்த்திக் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பல பிரச்சனைகளால் அப்போது விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார் .

இந்நிலையில் தற்போது மீண்டும் பேக் டு பார்முக்கு வந்துள்ள தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக வெறித்தனமாக விளையாடி வருகிறார் . இதுமட்டுமல்லாமல் அவ்வப்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் அவர் கலக்கி வருகிறார் .

இந்த நிலையில் அவரது கிரிக்கெட் வர்ணனையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து தற்போது மனம்திறந்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக் கூறியதாவது :

எனது வர்ணனைக்கான மகத்தான பாராட்டு எம் எஸ் தோனியிடம் இருந்து கிடைத்தது . நான் அதை துளி அளவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தோனி என்னை அழைத்து நான் உங்களது வர்ணனையை மிகவும் ரசித்தேன் அற்புதமாக இருந்தது என்று பாராட்டினார். எனக்காக நேரம் ஒதுக்கி என்னை பாராட்டியதற்கு மிக்க நன்றி என்று கூறினார் .

பெங்களூரு அணியின் போட்காஸ்டில் அதிரடி ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை!" எங்கெல்லாம் மழை தெரியுமா?!

More in Featured

To Top