Connect with us

“நாக சைதன்யாவின் அடுத்த படத்தில் ஜோதிகாவா? சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக்கா?!”

Cinema News

“நாக சைதன்யாவின் அடுத்த படத்தில் ஜோதிகாவா? சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக்கா?!”

சூப்பர் ஹிட் ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நாக சைதன்யா மற்றும் ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான திரைப்படம் ’Bhool Bhulaiyaa 2’. இந்த படம் சுமார் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 250 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் ஆர்யன், தபு, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

காமெடி மற்றும் த்ரில் கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெற்றுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த படத்தின் கதையை தமிழ் மற்றும் தெலுங்குக்கு ஏற்ற மாதிரி சில மாற்றம் செய்து விரைவில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ’Bhool Bhulaiyaa 2’ படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்கில் கார்த்திக் ஆர்யன் கேரக்டரில் நாக சைதன்யாவும், தபு கேரக்டரில் ஜோதிகா நடிக்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால் இந்த செய்தியை நாக சைதன்யா தரப்பில் மறுக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரீமேக்கில் யார் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சொத்து வேண்டாம், பாசம் போதும்! விஜய் தேவரகொண்டாவின் பாசத்தில் விழுந்த சமந்தா! தீயாய் பரவும் Latest தகவல்!"

More in Cinema News

To Top